“கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பிரச்சனை”…. நடிகர் ராணாவுக்கு 2 ஆப்ரேஷன்…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். நடிகர் ராணா தமிழில் பெங்களூரு நாட்கள், ஆரம்பம், காடன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா தற்போது ராணா நாயுடு என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் நடிகர் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட ராணா தனக்கு நடந்த 2 அறுவை சிகிச்சைகள் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் சிறுவனாக இருந்த போது கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதனால் சிறு வயதிலேயே கண்களில் கார்னியல் ட்ரான்ஸ்ப்ரெண்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதன்பிறகு சில வருடங்களுக்கு முன்பு நான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். சிலர் சிறிய பிரச்சனை வந்தாலே பயப்படுகிறார்கள். ஆனால் நான் என் வாழ்வில் 2 முறை பெரிய பிரச்சனைகளை பார்த்து பயப்படாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வாழ்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ராணா பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply