“ஜம்முவில் வெடி பொருள் கண்டெடுப்பு” பூஞ்ச் நெடுஞ்சாலை பரபரப்பு…!!

ஜம்மு பூஞ்ச் பகுதியில் வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் காஸ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 துணை இராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் அதிரடி நடவடிக்கைகளை மேகொண்டது. இந்த சம்பவம் நிகழ்ந்தது முதல்  ஜம்மு பகுதியில் இந்திய இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கல்லார் சவுக் என்ற இடத்தில் உள்ள ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் வெடிபொருள் கிடப்பதாக தகவல் எழுந்தது.

ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட  வெடிபொருள்

இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர  சோதனையில் ஈடுபட்டனர்.பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்டு I.E.D என சந்தேகிக்கப்படும் அந்த வெடிபொருளை வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.