வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் விமானநிலையத்தில் பரபரப்பு..!!

சேலத்தில்  உள்ள விமான நிலையத்தில் பெண் பயணியிடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னைக்கு  செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரது கைப்பை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது வெடிபொருள் இருப்பது போன்று சிக்னல் அலாரம் ஒலித்தது, அதனால் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் விமானநிலையத்தில் க்கான பட முடிவு

உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் கைப்பையில் ரசாயனம் படர்ந்திருபதை கண்டுபிடிக்கப்பட்டது.  அவர் சென்னையில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் பணியாற்றுவது  உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சாலை வழியாக  அந்தப் பெண்ணை  சென்னைக்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.