“திமுக MLA தீடிர் மரணம்” அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்  ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள  கு. ராதாமணி உடல் நலக்குறைவின் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

விக்கிரவாண்டி  தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானார்

தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த கு. ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார். இவரின் மரணத்தால் திமுக_வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் திமுக தலைமை கழகம் சார்பிலும் , திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மறைந்த MLA கு. ராதாமணி குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.