கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணிர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். ,

மேலும் படகுசவாரி செய்தும்,குழதைகளுடன் மகிழ்சியாக விடுமுறையை களித்தனர். இதனிடையே கோதையார்,பேச்சிபாறை,சிற்றார்,பெருங்சாணி போன்ற பகுதிகளில் மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகள் பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வதால் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றனர்.