நீங்க போக கூடாது… தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்துகள்… திருநெல்வேலியில் பரபரப்பு…!!

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஜுன் 28 – ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் நாங்குநேரி பகுதியில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பணிமனை அதிகாரிகள் விரைந்து சென்று அரசு பேருந்திற்கான உரிய சுங்க கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அதன்பிறகு அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியது. இதனால் அந்த சுங்க சாவடி பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *