உற்சாகமாக ”நடனமாடிய பாஜக M.P” சுதந்திர தினத்தை கொண்டாடினார்…!!

சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

Image

இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் அறிவிக்கப்பட்டு அங்கும் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.இதை கொண்டாடும் வகையில் அங்குள்ள லடாக் தொகுதி பாஜக எம்பி ஜம்யாங் செரிக் நம்ஜியால் உற்சாகமாக ஆடி சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினார்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.