வசமாக சிக்கிய மாஜி அமைச்சர்..! எங்கேயேயும் போகக் கூடாது…! 45 நாள் கெடு விதித்த நீதிபதி…!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்தார் என்று குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனை ஜாமீனில் அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும்,  தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியே செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தனது நிபந்தனை ஜாமினில் தளர்வுகள் கோரியும்,  தன் மீது போடப்பட்டிருக்கின்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜோசப் மற்றும் ரிஷிகேஸ் ராய் முன்பு விசாரணைக்கு வந்தது. ராஜேந்திரா பாலாஜி சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் கிரியைப் பொறுத்தவரை,  இராஜேந்திர பாலாஜிக்கு ஏற்கனவே வழங்கிய ஜாமினில் அவர் எந்த தவறும் செய்யவில்லை.

அவர் தமிழ்நாட்டுக்குள்ளே தான் இருக்கிறார். அவர் அரசியல் அரசியல்வாதியாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே அவருக்கு வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது மட்டுமல்லாமல் அவர் மீது போடப்பட்டிருக்கின்ற எஃப்ஐஆர்_ரை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  ஆனால் இந்த அனைத்து வாதங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமித் ஆனந்த் திவாரியை பொருத்தவரையில் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு முறை அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவரை சார்ந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மையாக இருக்கிறது. அவர் மீது குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்படும் வகையில் இருப்பதால்,  இன்னும் சில நாட்களில் நாங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறோம். எனவே அவருக்கு தமிழகத்தை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே எம் ஜோசப் மற்றும் ரிஷிகேஸ் ராய் ராஜேந்திரபாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக போலீசாருக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். மேலும் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியேற செல்ல கோரிய அனுமதியும் தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply