”எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்” மகளின் குறும்பை குறிப்பிட்ட தோனி …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோன்று தோனியின் மகள் ஸிவாவிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவ்வப்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் அவரது குறுப்புத்தனமான காணொலி, புகைப்படங்களே ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்தக் காணொலி, புகைப்படங்களை தோனியே தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் படங்களை ஒன்றாக பதிவிட்டு தனது மகள் குறித்த நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ‘ரன்வீர் ஏன் எனது கண்ணாடியை அணிந்திருக்கிறார் என தெரிவித்த ஸிவா, உடனடியாக மேல் தளத்திற்குச் சென்று தனது கண்ணாடியை எடுத்தார். இந்தக் காலத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் வேறுபட்டு இருக்குகிறார்கள். என்னுடைய நான்கு வயதில் என்னிடம் இதுபோன்று கண்ணாடிகள் இருந்ததில்லை. நிச்சயம் அடுத்தமுறை ரன்வீர்சிங்கை ஸிவா பார்க்கும்போது இந்தக் கண்ணாடி குறித்து பேசுவார்’ எனப் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *