5 நிமிடத்தில் சுவையான மொறு மொறு ஈவினிங் ஸ்னாக்ஸ்…

உருளைகிழங்கு, வெங்காயம் இருந்தா 5 நிமிசத்தில் மொறுமொறு ஸ்னாக்ஸ் ரெடி…

 

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு
பெரிய வெங்காயம்
கொத்தமல்லி இலை
மிளகாய்த்தூள்
சோம்பு
உப்பு
கடலைமாவு

 

செய்முறை:

ஒரு உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக சீவி தண்ணீரில் போட்டு நன்கு சுத்தம்செய்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகள், கால் ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு கடலைமாவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்துகொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இந்த கலவையை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வடைபோல் செய்து எண்ணையில் போட வேண்டும்.மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து பிறகு பரிமாறவும். சுவையான மொறு மொறு ஈவினிங் ஸ்னாக்ஸ் ரேடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *