மாலை நேர தின்பண்டம் : ருசியான அவல் போண்டா செய்வது எப்படி ?

மாலை நேர தின்பண்டமாக வீட்டில் சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் போண்டா (aval bonda) எப்படி செய்வது குறித்து பார்ப்போம்.

அவல் போண்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் : 

 • அவல் – 2 கப் 

 

 • கடலை மாவு – 1 கப்

 

 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 4

 

 • வெங்காயம் – 4 (பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்)

 

 • மிளகாய் தூள் – 2  ஸ்பூன்

 

 • கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு (பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)

 

 • பச்சை மிளகாய் – 6

 

 • சாட்மசாலா – 2 ஸ்பூன்

 

 • தேவையான அளவு – உப்பு

 

 • இஞ்சி – ஒரு சிறிய துண்டு (பொடிதாக நறுக்கிவைத்துக்கொள்ளவும்)

 

 • எண்ணெய் – 1 லிட்டர்

 

அவல் போண்டா (Aval Bonda)  எப்படி செய்வது :

அவல் போண்டா (aval bonda) செய்வதற்கு முதலில் இரு கப் அவல் சேர்த்து பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின்னனர் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.இதையடுத்து 1  கப் கடலைமாவுவை சேர்த்து அதில் 2 ஸ்பூன் சாட்மசாலா, 2  ஸ்பூன் மிளகாய் தூள், தேவைக்கு தக்க உப்பு  சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து பிசையவும்.

Image result for அவல் போண்டா

இதற்க்கு அடுத்ததாக பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து இதை சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும். இறுதியாக அடுப்பில் இருக்கும் கடாயில் எண்ணெய் ஊற்ற்றி நன்றாக சூடேறியதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பென்னிறமாக பொரித்து எடுத்தால் சுவை மிக்க அவல் போண்டா (aval bonda) ரெடி. இதனை நாம் மாலை நேர தின்பண்டங்களாக ருசித்து மகிழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *