“இந்திரா காந்தி கூட அப்படி பேசுவதை எதிர்த்தார்”…. ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த மந்திரி அமித்ஷா…!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாட்டின் அரசியலை வெளிநாடுகளில் விவாதிப்பதை எதிர்த்தார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தால் நாடாளுமன்றத்தில் நிலவும் குழப்பம் தீரும். அவர்கள் இரண்டு படிகள் முன் வர வேண்டும். அப்போதுதான் நாங்கள் இரண்டு படிகள் மேலே செல்வோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்றும், அரசியல் தலைவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். அதன் பிறகு சுய அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் வசம் இருப்பதாகவும் கூறினார்.

இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி வெளிநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தொடர்ந்து பாஜகவினர் வலியுறுத்தி வருகிறது. மேலும் இதை மனதில் வைத்து தான் அமித்ஷா இந்திரா காந்தி கூட இந்திய ஜனநாயகம் குறித்து வெளிநாடுகளில் பேசுவதை விரும்ப மாட்டார் என்று கூறியுள்ளார்.

Leave a Reply