எடுத்துக்கோங்க…! ”சும்மா வதந்திய கிளப்புறாங்க” ரஜினி அதிரடி முடிவு …!!

கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு சென்னை இறையாகி உள்ளது. சென்னையில் மட்டும் அதிகமான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,458ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை அளித்து வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது.

இதனால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்களை சிகிச்சைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதில் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபமும் அடங்கும்.ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கொரோனா வார்ட்டாக மாற்ற தரமுடியாது என்ற தகவல் பரவியது.

இதையடுத்து தான் தற்போது கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனா  சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். மாநகராட்சி எப்போது வேண்டுமானாலும் மண்டபத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரஜினி தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *