இது கடவுள் தன் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான நேரம்?…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டுவிட்….!!!!

கடந்த 2012-ல் வெளியாகிய 3 திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா டைரக்டு செய்தார். இதற்கிடையில் ஐஸ்வர்யா மீனு அரோரா தயாரிப்பில் “ஓ சாத்தி சால்” எனும் இந்தி திரைப்படத்தை டைரக்டு செய்ய உள்ளதாக தன் சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார். இப்போது அவர் “லால் சலாம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் லால் சலாம் சூட்டிங் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது “ஒரு பழமையான அம்மன் கோயிலில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தற்செயல் என்று சொல்லலாம் (அல்லது) சில சமயங்களில் கடவுள் தன் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான இனிமையான சிறிய வழிகளைக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply