இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை ரவீனா டாண்டனுக்கு “பத்மஸ்ரீ விருது”…. வாழ்த்தும் திரையுலகினர்….!!!!

வருடந்தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 6 நபர்களுக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஆர்ஆர்ஆர்-ன் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் போன்றோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹூசைன் மற்றும் 3 முறை தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெய்ராம் போன்றோர் முறையே பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளை பெற்றனர். இதில் ஹூசைன் முன்னதாக 1998-ல் பத்மஸ்ரீ மற்றும் 2022-ல் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply