இறுதிக் கட்டத்தை நெருங்கிய விஷாலின் “மார்க் ஆண்டனி”…. வெளியான புது அப்டேட்…..!!!!

லத்தி திரைப்படத்தை அடுத்து இப்போது விஷால் நடிக்கக்கூடிய 33-வது படத்தை டைரக்டர் ஆதிக்ரவிசந்திரன் இயக்குகிறார். இந்த படத்துக்கு “மார்க் ஆண்டனி” என பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். அதோடு இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

“மார்க் ஆண்டனி” படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் எஸ்.ஜே சூர்யா தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.