ஈரோட்டில் அதிமுகவுக்கும் இல்லை, திமுகவுக்கும் இல்லை…. டிடிவி தினகரன் திடீர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் ஈரோடு இடைத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாதென தேர்தல் ஆணையமானது தெரிவித்திருக்கிறது. இதனால் அ.ம.மு.க வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் ஆதரவு திமுகவுக்கும் இல்லை, அதிமுகவுக்கும் இல்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை பிப்ரவரி 12ஆம் தேதி அறிவிப்போம் என்றார். இரட்டை இலை இருப்பதால் அதிமுக 5,000 வாக்குகள் அதிகம் பெறலாமே தவிர வெற்றி பெற முடியாது என்று டிடிவி தினகரன்.கூறியுள்ளார்.