“ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்”…. வெற்றி பிரகாசமாக இருக்கு…. OPS நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து தேனி போகும் முன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தங்களோடு தொடர்ந்து இணக்கமாக இருக்கும், கூட்டணியை விரும்பும் கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான ஆதரவு கொடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பிரகாசமாக இருப்பதாக” பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply