“ஈரோடு இடைத்தேர்தல்”…. அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பாஜக பிரச்சாரம் செய்யும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 13வது சட்ட திருத்தம் தொடர்பாக தான் இலங்கை செல்கிறேன். இதனால் இன்று நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார். வரும் நாட்களில் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்குவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.