ஈரோடு இடைத்தேர்தல்: 3 நாட்களில் அதிமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு…. வெளியான தகவல்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் சூடுப்பிடிக்க தொடங்கி இருப்பதாகவும், அ.தி.மு.க தேர்தல் பணிக் குழுவினர் சாலையோர கடைகளிலும், வீடுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.