#ErodeEastElection: பாஜகவுக்கு ஐஜேகே ஆதரவு: மதிப்பிழந்து நிற்கும் அதிமுக..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டிற்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்று அக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் இவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த தொகுதியில் 26,  28 இல் வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலையில்,

அடுத்த கட்டமாக  தேசிய கட்சியான பாஜக போட்டியிட வேண்டும் என்று அதிமுக சார்பில் கட்சியில் உள்ள இரு அணிகளும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே தனித்தனியாக அண்ணாமலையை சந்தித்து…  நீங்கள் போட்டியிட்டால் நாங்கள் ஆதரவளிப்போம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான். எனவே அதிமுக எடுக்கும் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்க தயார் என அண்ணாமலை கூறிய நிலையில் ஓபிஎஸ்,  இபிஎஸ் என இருவரும் தங்களுடைய கட்சியில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது ? என்று  பலத்தை நிரூபிக்கும் வகையில் இருவருமே தனித்தனியாக வேட்பாளரை அறிவிக்க தயாராகி  இருக்கிறார்கள். இதற்காக  ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட கட்சியை நாடி  தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் வளர்ச்சிகாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார். அவர் வழிகாட்டுதலின்படி தமிழக பாரத ஜனதா கட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக எடுக்கும் நிலைப்பாட்டை முழு மனதோடு ஆதரிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை சிறிய கட்சிகள் கூட மதிக்காமல் இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.