ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய கமல்ஹாசன்,

விஸ்வரூபம் படம் என்று ஒரு படம் எடுத்தேன். அப்போது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும்,  இன்றைய முதல்வர் மு க ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவ வேண்டுமா ? என்று கேட்டனர்.

அது என் பிரச்சனை என்பதால் நான் மறந்து விட்டேன். இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளோம். கிழக்கு இந்திய கம்பெனியை கஷ்டப்பட்டு போராடி வெளியேற்றினோம். இப்போது வடக்கு இந்திய கம்பெனி உள்ளது. அதே சுரண்டல்,  இதை மாற்ற வேண்டும் என பிரசாரத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.