#ErodeEastByElection: 250 தபால் வாக்குகளை பெற்ற EVKS இளங்கோவன்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த EVKS இளங்கோவன் முன்னிலை வகிக்கின்றார். அவர் 53 ஆயிரத்து 548 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுகவின் தென்னரசு 19,936 வாக்குகளும், மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின்  மேனகா நவநீதன் 1964 வாக்குகளும்,  நான்காவது இடத்தில் தேமுதிக கட்சியின் ஆனந்த் 431 வாக்குகளும் பெற்று இருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கில் பதிவான 398 தபால் வாக்குகளில் காங்கிரஸின் இளங்கோவனுக்கு 250 வாக்குகள் கிடைத்தனஅதிமுகவின் தென்னரசுவுக்கு 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 10 வாக்குகளும்,  தேமுதிகவுக்கு ஒரு தபால் வாக்கும் கிடைத்தது. தபால் வாக்குகளில் 25 வாக்குகள் செல்லாதவை.  67 வேட்பாளர்களுக்கு ஒரு தபால் வாக்கும் கிடைக்கவில்லை.