ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது வரை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 6 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் EVKS இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றார். காங்கிரஸ் கட்சி சேர்ந்த EVKS இளங்கோவன் 46, 176 வாக்குகளும், அதிமுகவின் தென்னரசு 16 777 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நாம் தமிழரை சேர்ந்த மேகனா 2722 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 225 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இரண்டு சுற்று குறித்த முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் தேமுதிகவை சுயேச்சை வேட்பாளர் பின் தள்ளியுள்ளார். சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா 275 வாக்குகள் பெற்றுள்ளார்.