ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட EVKS இளங்கோவன் 45 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார். திமுக கூட்டணியின் இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் – கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்களித்தனர் என்பதை ஏற்க மாட்டோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கான தேர்தல். ஆளுங்கட்சியை எதிர்க்க எவ்வளவு பணபலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தி உள்ளது. ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது என தெரிவித்தார்.