தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மிக முக்கியமான மனு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் உடைய இடைத்தேர்தல் வரக்கூடிய 27ஆம் தேதி நடைபெற இருக்கக் கூடிய நிலையிலே அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் முக்கிய மனு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய பாதுகாப்பு படை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் முறைகேடுகள் பல நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அவற்றை தடுக்கக்கூடிய வகையிலே மத்திய பாதுகாப்பு படை அனுப்ப வேண்டும்.
மத்திய பாதுகாப்பு படையின் உடைய ஒத்துழைப்போடு தான் இந்த தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும் என அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சராகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கக்கூடிய சிவி சண்முகம், அதேபோல வழக்கறிஞர் பிரிவில் இருக்கக்கூடிய இன்பதுரை ஆகியோர் தேர்தல் ஆணையத்தை அணுகி மனு கொடுத்து இருக்கிறார்கள். திமுக கூட்டணி பட்டுவாடா செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே அதனை தடுக்க கூடிய வகையில் மத்திய பாதுகாப்பு படை உடனடியாக தொகுதிக்கு வர வேண்டும் அப்போதுதான், பிரச்சாரங்கள் முழுமையாக இருக்கும், நேர்மையான முறையில் இடைத்தேர்தல் நடைபெறும் என அந்த மனுவிலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.