ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு …… வாக்காளர்கள் காத்திருப்பு….!!

சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் வீரப்பன்சத்திரம் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் கோளாறு  காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருகின்றனர். அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்து வருகின்றனர்.