ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கிய EPS; பெரிய பாவத்தை செஞ்சுட்டாரு; ஓபிஎஸ் தடாலடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற இந்த தருணத்தில், பல பிரச்சனைகளை..  விரும்பத்தகாத பிரச்சனைகளை,  யார் உருவாக்கினார்கள் ? என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இவ்வளவு பெரிய செயலை…  பாவத்தை செய்து விட்டு, அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்பது ஏற்படதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். பொதுவாகவே மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் ? நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் யார் ? என்பதும் நாட்டு மக்களுக்கு, நல்லவர்களுக்கு,  அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.