இப்படிப்பட்ட கேவலமான செயலை செய்யாதீங்க…. அம்மு அபிராமி ரசிகர்களுக்கு அலார்ட்….!!!!

அம்மு அபிராமியின் youtube சேனலின் லோகோவை திருடிய மர்ம நபர் தொடர்ந்து பண மோசடி செய்து வருகிறார்.

நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அம்மு அபிராமி. அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3- யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றே ஆரம்பித்து அதில் தனது சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருவது இவரது வழக்கமாகும்.

இந்நிலையில் யாரோ மர்ம நபர் ஒருவர் அம்மு அபிராமி youtube சேனலின் லோகாவை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பண மோசடி செய்திருக்கிறார். இதனை உண்மை என்று பின்தொடர்ந்த ஒருவரிடம் உங்களுக்கு ஐபோன் பரிசு விழுந்துள்ளது. இதை அனுப்பி வைக்க டெலிவரி கட்டணம் ரூ.7000  அனுப்புங்கள் என்று அம்மு அபிராமி கேட்பதுபோல் கேட்டு இருக்கிறார். இதனையும் உண்மை என்று நம்பி அந்த ரசிகரும் பணம் அனுப்பியுள்ளார்.

ஆனால் ஐ போன் வரவில்லை. தான் ஏமாந்த விவரத்தை அம்மு அபிராமியிடம் ரசிகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அம்மு அமிராமி தனது ரசிகர்களை உஷார்ப்படுத்தும் விதமாக  வீடியோ ஒன்றே பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”எனது பெயரில் நடந்துள்ள மோசடி அறிந்து அதிர்ச்சியானேன். இதுபோன்று அடுத்தவர்கள் காசை அடிக்கும் கேவலமான செயலை செய்யாதீர்கள். நான் பரிசுபொருள் அறிவிப்பது இல்லை. இதுபோல் யாரும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply