எப்படி இருக்கிறார் கங்குலி ….? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி கொல்கத்தாவில்  உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் ‘ கங்குலியின் உடல் சீரான நிலையில் இருப்பதாகவும், அவர் இரவு நன்றாக தூங்கியதாகவும் ,காலை உணவு மற்றும் மத்திய உணவை எடுத்துக் கொண்டார்’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *