இந்தியாவில் ஊழியர்கள் பலரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பயனர்களாக உள்ளனர். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை அதிக வட்டி விகிதங்களுக்கு மாற்ற முடியும். இதனை VPF மூலம் செய்ய முடியும். ஆனால் இதனை நீங்கள் நேரடியாக செய்ய முடியாது. நிறுவனம் குறைந்தபட்ச தொகையை பி எப் பேலன்ஸுக்கு வழங்கி வரும் நிலையில் அதனை அதிகரிப்பதற்கான வாய்ப்பை பல நிறுவனங்கள் வழங்குகின்றன.

இதனைப் பயன்படுத்தி பி எப் பங்களிப்பை அதிகரிக்கும்படி தங்களுடைய நிறுவனத்திடம் ஊழியர்கள் கேட்கலாம். இதன் மூலமாக உங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணம் குறைக்கப்பட்டாலும் அதிக pf பேமென்ட் காரணமாக நீங்கள் அதிக பணத்தை சேமித்து அதன் மூலம் வரியையும் சேமிக்கலாம். மேலும் ஒவ்வொரு மதிப்பீடு சுழற்சிக்கு பின்னரும் உங்கள் கைக்கு வரக்கூடிய பணமும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது