ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதனுடைய பிராந்திய அலுவலகத்துக்கு நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது. EPFO கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் பாரா 44(9)ல் உள்ள வழிமுறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்பாக உச்சநீதிமன்றமானது தன் தீர்ப்பில் 2014-ஆம் வருடம் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தை (திருத்தம்) உறுதிசெய்தது. இதனிடையில் இபிஎஸ் திருத்தம் (ஆகஸ்ட் 2014) ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூபாய்.6,500ல் இருந்து ரூ.15,000 ஆக அதிகரித்தது.

அத்துடன் கூடுதலாக உறுப்பினர்கள் தங்களது உண்மையான சம்பளத்தில் (வரம்பை மீறினால்) 8.33 சதவீதத்தை முதலாளிகளுடன் சேர்ந்து EPSபி-க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் அனைத்து இபிஎஸ் உறுப்பினர்களும் திருத்தப்பட்ட திட்டத்தை தேர்வு செய்ய 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. EPS 95-ன் கீழ் அதிக ஓய்வூதியம் பெற தகுதியான சந்தாதாரர்களுக்கு 4 மாதங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறுவது எப்போது?

ஓய்வுக்கு பின் உங்களது PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் வேலையை விட்டு வெளியேறிய 2 மாதங்களுக்கு பிறகும் உங்களது EPFன் முழுத்தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். நீங்கள் உங்களது வேலையை இழந்து 2 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால், அத்தகைய நிலையிலும் நீங்கள் முழு PF தொகையையும் திரும்பப்பெறலாம். எனினும் நீங்கள் பணியாற்றும்போது PFல் இருந்து குறிப்பிட்ட தொகையை திரும்பப்பெற விரும்பினால், இதற்கு நீங்கள் சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் விண்ணப்பித்த 3 -7 தினங்களுக்குள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் பெறப்படும்.