அங்க ஏதோ பண்றாங்க…. தப்பி ஓடிய ஓட்டுனர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஏரியில் மணலை கடத்த உபயோகித்த எயந்திரங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாலைநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் கல்லூரியின் பின்புறத்தில் இருக்கும் ஏரியில் இரண்டு டிப்பர் லாரிகளில் பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக மணல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினரை பார்த்ததும் ஓட்டுனர்கள் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் மனைவி வித்யா மற்றும் ஓட்டுநர் லோகநாதன் ஆகிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *