இந்த வாரத்திற்குள் 2-டோஸ் தடுப்பூசி …. 16 கோடியை எட்டிவிடும் …. அதிபர் ஜோ பைடன் ….!!!

 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  எண்ணிக்கை 16 கோடியை  எட்டிவிடும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார் .

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக                 உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்தது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா  தொற்றுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது . மேலும் அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அமெரிக்காவில் பைசர்/பையோஎன்டெக் , மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய கொரோனா  தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதுவரை அங்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 33,12,14,347 ஆக உள்ளதாக அந்நாட்டு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதில் 18,27,14,064 பேர் முதல் தவணை  தடுப்பூசியும் , 15,76,36,088 பேர் 2-வது  தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்குள் நாட்டில் 2-வது  தவணை  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 16 கோடி எட்டிவிடும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார் .

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டின் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியதன் மூலம் இந்த 5 மாதத்தில் மட்டும் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நான் பதவிக்கு வருவதற்கு முன் வெறும் 30 லட்சம் மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. மேலும் இந்த வார இறுதிக்குள் நாட்டின் 2 -வது தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டிவிடும். இதில் 16 கோடியே 20 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளதாகவும் , அதில் 90% பேர் மூத்த குடிமக்கள் மற்றும் 70 சதவீதம் பேர் 27 வயதிற்கு மேற்பட்டோர்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *