“தி கிரேட் இந்தியன் கிச்சன்”…. அதற்காக தான் இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்?…. மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!

மலையாளத்தில் வெளியாகிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை தற்போது டைரக்டர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்து உள்ளார். இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அதோடு நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில்  தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிலையில் ரீமேக் படத்தில் நடித்தது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். அதாவது “மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவேண்டும் என என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். மறு உருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோன்று எனக்கும் ஒப்பீடு மற்றும் குழப்பம் இருந்தது. கிராமத்திலுள்ள பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையில் கழிந்து விடுகிறது. அதற்காக தான் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற சிறந்த படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்” என்று அவர் கூறினார்.