என்னமா..! இப்படி பண்ணுறீங்களே மா…. தல பொண்ணு இப்படி இருக்கலாமா ? ரசிகர்கள் வேதனை …!!

நடிகர் அஜித் மகளாக நடித்த அனிகாவின் வைரல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும், நல்ல வசூலையும் வாரி குவித்தது. இதில் நடிகர் அஜித் , அனுஷ்கா , த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அனிகா. இதுதான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம்.

இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய மிருதன் , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கச்சிதமாக நடித்த மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்தார்.

இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. சமீபகாலமாக அனிகா தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகின்றார். அண்மையில் இவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி அஜித் படத்தில் நடித்த  அனிகாவா இது ? என்று ரசிகர்கள் அனைவரும் வாயை பிளக்கும் வைரலாகி வருகிறது.