என்கிட்ட திரும்ப கொடுத்திருங்க …. தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் .இவர் சம்பவ தினத்தன்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்ததாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பரிசோதனை முடிந்த பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் .அப்போது காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறிய  கார்த்திகேயன் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .

இதுகுறித்து தகவலறிந்த வாய்மேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது அவர்களிடம் தன்னிடம் இருசக்கர வாகனத்தை  திரும்ப ஒப்படைத்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறியுள்ளார். இதன் பிறகு சுமார் 2 மணி நேரத்திற்குப் பின் செல்போன் கோபுரத்தில் இருந்து கார்த்திகேயன் கீழே இறங்கி வந்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் ஆகியோர் தற்கொலை மிரட்டல் விடுத்த கார்த்திகேயனை  கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *