இனி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு …கேப்டன் இவருதான் …சஞ்சு சாம்சன் நியமனம் …!!!

ஐபிஎல் 2021 சீசனில் ஸ்டீவ் ஸ்மித்  விடுவிக்கப்பததால் ,அவருக்கு பதிலாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தனர் .

ஐபிஎல் போட்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு  சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதற்கடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்  இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிங் ,அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருடைய பேட்டிங் சரியில்லாத காரணத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,நடந்த ஐபிஎல் ஏலத்தில்  அவரை தேர்வு செய்யவில்லை.

இதற்கு மாற்றாக அணியின் இளம் வீரரான   சஞ்சு சாம்சன்  ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு ராஜஸ்தான் அணியின் இயக்குநராக  இலங்கை வீரர் சங்கக்கரா தேர்வு செய்யப்பட்டார் . இதைப்பற்றி சஞ்சு சாம்சன் கூறும்போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், என்னுடைய பணியை சிறப்பாக செய்வேன். என்று கூறினார் . ‘ராஜஸ்தான் அணியின் கேப்டனாக தலைமை தாங்குவேன் என்று  கனவில் கூட நினைத்ததில்லை’. அதோடு ராஜஸ்தான் அணியின் இயக்குநரான  இலங்கை வீரர்  சங்கக்கராவுடன் விளையாடுவது ,எனக்கு கனவு போல உள்ளது ,என்றுஅவர் கூறினார்.