இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாது?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய ஜனவரி மாத அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறை கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மற்றொருபுறம் கடந்த காலங்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் வெளியிட்டது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

அதோடு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியையும் இழக்க நேரிடலாம். பணியின்போது ஊழியர் ஒருவர் அலட்சியமாக இருப்பின் ஓய்வு பெற்றபின் அவரது ஓய்வூதியத்தையும் கிராஜுவிட்டியையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவானது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். வருகிற காலங்களில் பல மாநில அரசுகளும் இதை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.