அரைசதம் அடித்து மிரட்டிய ரூட், ராய் அவுட்…. இங்கிலாந்து அணி 25 ஓவரில் 135/3…!!

இங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 135 ரன்களுடன் விளையாடி வருகிறது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர்.

Seithi Solai

போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய  2 வது பந்தில் பேர்ஸ்டோ 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜோ ரூட்டும், ஜேசன் ராயும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சினை சிறப்பாக எதிர் கொண்டனர். இருவரும் அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோரும் 100 ரன்களை கடந்தது.

Image

அதன் பின் 19வது ஃபெலுக்வயோ பந்து வீச்சில் ராய் 54 (53) ரன்களில்  டுப்லெஸிஸ் வசம் பிடிபட்டார். அதை தொடர்ந்து ரபாடா வீசிய 20 வது ஓவரின் முதல் பந்தில்  ரூட் 51 (59) ரன்களில் டுமினியிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து இயான் மோர்கனும், பென் ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்  இழந்து 135  ரன்கள் குவித்துள்ளது. மோர்கன் 14 ரன்களுடனும் , ஸ்டோக்ஸ் 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.