‘இவர்களுக்கும் இது பொருந்தும்’…. விரைவில் விதிகள் அமல்…. இங்கிலாந்து அரசின் நடவடிக்கை….!!

பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். மேலும் சில நாடுகளில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடையும் விதித்துள்ளனர்.  குறிப்பாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்துக்கு வருகை புரியும் இந்தியர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டாலும் அவர்கள் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிலும் இந்தியா போன்று ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சுல்தான், தாய்லாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் இந்த விதியானது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விதியானது வருகின்ற அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *