எங்களுக்கு பத்தல… பொது மக்களின் போராட்டம்… அதிகாரியின் பேச்சுவார்த்தை…!!

யூனியன் அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் யூனியன் அலுவலகம்  அமைந்துள்ளது.  அந்த யூனியன் அலுவலகத்தின் முன்பு வார்டு உறுப்பினர் சரஸ்வதி மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன் ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தாமஸ் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம்.

அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து  அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதில் உள்ள தண்ணீர் அனைத்து மக்களுக்கும் போதுமானதாக இல்லை எனவும், குடிநீருக்காக மிகுந்த சிரமப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டியானது இடிந்து விழும் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மிகுந்த வேதனையுடன்  தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தங்களின் பகுதிக்கு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்ததோடு கோரிக்கை மனு ஒன்றை அதிகாரியிடம் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் சீனிவாசன் என்பவர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.