“உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” தந்தைக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தனது குழந்தையை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பிய போது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கச்சிராயபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் மெக்கானிக் என்ஜினீயரான இவர் நாமக்கல்லிலுள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இவருக்கு அகில் மணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அகில் மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக அகில் மணியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுரேஷ் தனது குழந்தையை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் குழந்தையைப் பார்த்துவிட்டு சில பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து சுரேஷின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு பரி சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *