வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள எடையாளம் கிராமத்தில் இன்ஜினீயரான அனந்தசயனன் வசித்து வந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு பல இடங்களில் வேலை தேடி அடைந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அனந்தசயனன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.