“எனக்கு கவர்மெண்ட் வேலை வேணும்” இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள இந்திரா நகரில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரமோத்குமார் இன்ஜினியரிங் முடித்து விட்டு ஓசூரிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வந்ததால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த பிரமோத்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *