இங்கிலாந்தின்  சிவப்புப் பட்டியலில்… இணைந்த 4 நாட்டு மக்கள் … இங்கிலாந்திற்குள் வர தடை …!!!

கொரோனா  பரவலின் காரணமாக, இங்கிலாந்திற்குள்  4 நாடுகளை சேர்ந்த மக்கள் வருவதற்கு  தடை விதிக்கப்பட்டது.

உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்த  ,நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 6வது இடத்தை பெற்றுள்ளது. இந்நாட்டில் சுமார் 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திற்குள் தென்னாபிரிக்கா ,மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கொரோனா தொற்று ,அதிகமுள்ள முக்கிய நாடுகளில் பெயர்களை சிவப்புப் பட்டியலில் வைத்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான், வங்காளதேசம், கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 4 நாடுகள் இங்கிலாந்தின்  சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த 4 நாடுகளில்  இங்கிலாந்தை சேர்ந்த மக்கள் மட்டும் ,வருவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த  சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ,4 நாட்டு மக்கள் இங்கிலாந்தில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி காலை 4 மணிக்கு  அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.