பிளீஸ் இனி எங்களுக்காக இதை மட்டும் பண்ணுங்க?…. -தொகுப்பாளினி டிடி….!!!!

பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி. இவர் 21 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார். கடந்த 2014 ஆம் வருடம் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 -ம் வருடம் விவாகரத்து பெற்றனர். அண்மையில் டிடி, தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை அமர்ந்து தான் தொகுத்து வழங்கினார்.

இது குறித்து டிடி பேசியதாவது “இப்பதிவு என்னை போல மணிக்கணக்கில் நின்றபடி பணிப்புரியும் தொகுப்பாளர்களுக்கு தான். நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் தொகுப்பாளர்களுக்கு என ஒரு தனி இருக்கை அமைத்து தர வேண்டும். அந்த இருக்கை பார்வையாளர்களுக்கு நாங்கள் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை நடத்துவது போல தெரிய வேண்டும். பல மணி நேரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் எங்களுக்கு உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.