விமானப்படை தாக்குதல்…. இவர்கள் சுட்டு வீழ்த்தவில்லை…. பாகிஸ்தான் மறுப்பு….!!

கடந்த 2019-ம் வருடம் தங்கள் நாட்டு போர் விமானத்தினை சுட்டு வீழ்த்தி விட்டதாக இந்தியா சொல்வதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

கடந்த 2019-ம் வருடம் தங்கள் நாட்டு போர் விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா அடிப்படையின்றி சொல்வதை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுக்கிறது. அதாவது பாகிஸ்தானிடம் உள்ள எஃ ப்-16 போர் விமானங்களின் எண்ணிக்கையை சர்வதேச நிபுணர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதனையடுத்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில், பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டவில்லை என்பதை அவர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்  கூறப்பட்டிருப்பதாவது “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அப்போது அமைதியை விரும்பும் நோக்கில் இந்திய விமானியை பாகிஸ்தான் விடுவித்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் கடந்த 2019-ஆம் வருடம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிபிஆர்எஃப் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் நுழைந்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் அமைந்திருந்த பகுதியில் பிப்ரவரி 27-ம் தேதியன்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தினை இந்திய விமானப்படையின் விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்த்தமான் சுட்டு வீழ்த்தினார். இதனைதொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் இயக்கிய மிக்-21 போர் விமானம் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனிடையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்த அவரை ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அதன் பிறகு அவர் மார்ச் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த மோதலில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக அபிநந்தனுக்கு “வீர் சக்ரா ” விருதை ராம்நாத் கோவிந்த் கடந்த திங்கட்கிழமை வழங்கி கௌரவப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *