பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்…. வெளியான கியூட் புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலமானவை. குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்ட கதை அம்சம் கொண்ட இச் சீரியல் தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீரியலின் ஆரம்பத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கவிதா கவிதா கெளடா. இதன் பிறகு அவருக்கு கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில் நடிகை கவிதா கெளடா தன் நிச்சயதார்த்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அவர் லக்ஷ்மி பிரம்மா என்ற சீரியலில் கவிதாவுக்கு கணவராக நடித்த சந்தன் குமார் தான் என்று தெரியவந்துள்ளது. இவர்களுக்கு பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *