ஆர்யா மற்றும் விஷால் நடிக்கும் “எனிமி”…. விறுவிறுப்பாக செல்லும் படப்பிடிப்பு…. வெளியான அப்டேட்…!!

முன்னணி நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடிக்கும் “எனிமி” படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ஆர்யா மற்றும் விஷால் அவன்-இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் எனிமி படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தினை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.

அடுத்த கட்டத்திற்கு சென்ற விஷாலின் எனிமி

மேலும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதன்பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றிருந்த படக்குழு 30 நாட்கள் அங்கு தங்கி படத்திற்கான அதிரடி சண்டைக்காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இறுதிகட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னணி நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.